ஆரம்பத்திலிருந்தே திவ்யா-இளவரசன் விவகாரத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது,அவர்களது வயதுதான்.கண்டிப்பாக இந்த வயதில் வருவது வெறும் இனக்கவர்ச்சியேயன்றி காதலில்லை.ஒரு வேலையோ அல்லது சுயதொழிலோ மொத்தத்தில் ஒரு பெண்ணை வைத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு சம்பாதிக்காதவனுக்கு காதல் வருவதும் அதை பேஸ்புக்கிலும்,பத்திரிக்கைகளிலும் ஆதரித்து பொங்குவது கடும்எரிச்சலையே தருகிறது.இங்கு முழக்கமிடும் எத்தனை பேர்உங்களது மகனோ,மகளோ அல்லது உங்களது சகோதர,சகோதரியோ இதே போன்று இருபது வயதுக்குள் காதல் என்று வந்து நின்றால் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைப்பீர்கள் ? செருப்பைக் கழட்டி அடிப்பீர்கள் தானே ?? சாதி,மதம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.ஒரு குடும்பம் நடத்தும் அளவுக்கு,ஒரு பெண்ணை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாதிக்காதவனுக்கு திருமணம் ஒரு கேடா ? எனக்குத் தெரிந்து ஒரே ஜாதியில் அதுவும் சொந்த அத்தை மகளை ஆறுமாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்த ஒருவன் சென்ற வாரம் தூக்கு மாட்டி இறந்துபோனான்.அவனுக்கு 19வயது அந்த பெண்ணிற்கு 17.காரணம் போதுமான வருமானமின்மை & மனப் பக்குவமின்மை.இளவரசன் விவகாரத்தில் அச்சிறுவனை ஹீரோவாக்கி ஜாதிவெறி என்று கூச்சலிடுவதன் மூலம் பதிவர்களுக்கு நிறைய லைக்குகள்,அரசியல்வாதிகளுக்கு நிறைய ஓட்டுகள்,பத்திரிக்கைகளுக்கு அதிக பிரதிகள் விற்பனை,செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் இவையெல்லாம் கிடைக்கிறது,அவ்வளவே.அதை தாண்டி இதில் யாவரும் இம்மாதிரியான காதல் ஜோடிகளுக்கு ஒருக்காலும் அடைக்கலமோ,ஆதரவோகொடுக்கப்போவதில்லை.இவர்களது எண்ணமெல்லாம் இப்படி உசுப்பேத்தி விடுவதன் மூலம் எவன் வீடோ எக்கேடு கெட்டுப்போனால்தான் என்ன ? எவன் வீட்டில் எழவு விழுந்தால்தான் என்ன ? நம்வீட்டில் நடக்காதவரை சரிதான் என்ற எண்ணமும்,தம்சுயலாபங்களும் தவிர வேறொன்றுமில்லை.இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் இவர்கள் வீட்டுக்கு அடைக்கலம் தேடிச் சென்றால் வீட்டைத்தாழிட்டுக்கொண்டு உள்ளே உட்கார்ந்துகொள்ளும் சூரப்புலிகள்தான் இவர்கள்.இங்கு நம்முடைய நிஜமுகம் தெரியவா போகிறதுஎனப் பதிவிடுபவர்களே அதிகம்.ஜாதி என்பது கிட்டத்தட்ட எல்லோருடைய ரத்தத்திலும் ஊறிக்கிடக்கிறது.அதை வெளிப்படுத்தும்விதத்தில்தான் வித்தியாசமிருக்கிறதே தவிர,ஜாதிய கட்டமைப்புகள் மாறியது போல தெரியவில்லை.என்னதான் படித்தவர்கள் அதிகமாகியிருந்தாலும் ஒரு வேலையில்லாத & பக்குவமில்லாத வயதில் காதல் செய்து பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான அச்சிறுவனை எதோ அளப்பரிய சாதனை செய்தவன் போல உருவகப்படுத்தி கூச்சலிடுவதை பார்க்கும்பொழுது இவர்களெல்லாம் மெத்தப் படித்தவர்கள்தானா என்ற ஐயம் எழுகிறது ! இவர்கள் தமிழ் சினிவாவில் 'காதல்' என்ற பெயரில் வரும் குப்பைப்படங்களைபார்த்து மதியிழந்து என்று மட்டும் தெரிகிறது.நிதர்சனத்தில் நடப்பதை பதிவிடுங்கள்,பாழாய்ப்போன உங்களது சுயலாபங்களுக்காக இன்னும் நேரடியாகச் சொல்லப்போனால் லைக்குகளுக்காக இப்படி உசுப்பிவிட்டு இன்னும் பலஇளந்தளிர்களை கருக வைத்துவிடாதீர்கள்,அவ்வளவே.!
(நான் காதலுக்கு எதிரியல்ல.திவ்யா இறந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதுதான்)
No comments:
Post a Comment