சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கிற பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மாணவர் விழா நடைபெற்றது. ஏ.டி.ஜி.பி டாக்டர் சைலேந்திர பாபு , சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மாணவர்களோடு கலந்துரையாடிய பின்னர் தலைமையுரையாற்றிய அவர், " Mr.VAIKO is the most dignified politician i ever met" என்றார்.
தகவலுக்கு நன்றி :- வைகோ , மதிமுக இணைய முகநூல்கள்.
.....................................................................................................................................................
திரு.வைகோ அவர்கள் கண்ணியமான அரசியல்வாதி என்று திரு. சைலேந்திரபாபுஅவர்கள் கூறுவதற்கு காரணம் இருக்கிறது.
பொடா சட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அடைபட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டவுடன் எங்கள் திருநெல்வேலி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டார். தினம் தினம் செய்திதாள்களில்மக்கள் தலைவர் வைகோ அவர்கள் பற்றிய செய்திகள் தான். தமிழரிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடைபயணம் அது.
அத்தகைய கீர்த்திமிக்க நடைபயணத்திற்கு சென்னைக்குள் தடை விதித்தார் அன்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. தலைவர் வைகோ உள்ளிட்ட நடைபயண தொண்டர்கள் முன்னிரவே தாம்பரம் அடைந்தனர். தாம்பரத்தை அடுத்து சென்னைக்குள் நடைபயணம் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருந்தார் தலைவர். காவல்துறை அசால்ட்டாக இருந்தது. விடியற்காலை இரண்டு மணியளவில் தாம்பரத்திலிருந்து இரண்டு இரண்டு பேராக நடக்க தொடங்கி விட்டார்கள்.
காவல்துறை விளித்து எழுவதற்குள் இரண்டரை மணி நேரத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அணையா தீபமாகஇருக்கின்ற அறிஞர் அண்ணா சமாதி வந்தடைந்து விட்டனர். அப்போது சென்னையில் இணை கமிஷனராக இருந்த சைலேந்திரபாபு அவர்கள், வைகோ அவர்களை பார்த்து என்ன இப்படி செய்து விட்டீர்கள், தடையுத்தரவை மீறி விட்டீர்களே, உங்கள் தொண்டர்களை கைது செய்கிறோம் என்றார். அதற்கு, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொண்டர்களை யாரையும் கைது செய்யக்கூடாது , வேண்டுமானால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்றார். மேலும், நாங்கள் ரோட்டோரமாக எவருக்கும் தொந்தரவு இல்லாமல் நடந்துதான் இங்கு வந்திருக்கிறோம்என்றார் .தொண்டர்கள் அமைதியாக இருந்தனர்.
திரு.சைலேந்திரபாபு திருப்தி அடைந்து அவ்விடத்தை விட்டு அகன்றார் !! அச்சம்பவம் அந்த அதிகாரியின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளால் மதிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளின் நன்னடத்தையே காரணம். இந்தியாவில் மாபெரும் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழகத்தில் தியாகச்சுடர் காமராசர், அறிவாசான் பெரியார் இவர்களை அடுத்து எஞ்சியிருக்கும்ஒரே அரசியல்வாதி மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே.
ஆகவே தான் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள், வைகோ அவர்கள் கண்ணியத்திற்குரிய அரசியல்வாதி என்று வர்ணித்திருக்கிறார்
வருக
தளத்தை பற்றிய கருத்துகள் வரவேற்கப்படும்
தேடுக
Wednesday, 10 July 2013
Monday, 8 July 2013
நோபல் பரிசு- தெரியாத தகவல்கள்
நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ளஉருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.
1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம்நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும்அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும்சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்கஏற்பாடு செய்தார்.
ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராகஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தைகண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத்தொடங்கினார்.
கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும்நொடித்துப்போனதுஎனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல்அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காகபயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.
மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால்சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும்,மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.
ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக்காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின்உலகம் தன்னை பழிக்கப்போகிறதுஎன்று கலங்கினார்.
அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும்பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும்கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டுஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டுஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல்வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.
ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்றுஉலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை
ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரதுபெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.

Sunday, 7 July 2013
டெய்லி உணவுல பெருங்காயம் சேர்த்துக்குங்க..ஏன் தெரியுமா?
பெருங்காயத்தால்ஏற்படும் உடல்நலன்கள்
பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின்நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.
மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும்,உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும்,நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இப்போது பெருங்காயத்தால்ஏற்படும் சில உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?
செரிமானமின்மை
ஆதி காலத்திலிருந்துபெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி,வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர்தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் பிரச்சனை
பெருங்காயத்தின்பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி,சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
ஆண்மை குறைவு
சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்தஉதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.
சுவாச பிரச்சனை
சுவாச குழாய் புண்களுக்குபயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
சர்க்கரை நோய்
பெருங்காயம் கணையச்சிரை அணுக்களை அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம்
பெருங்காயத்தில்உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத்தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
நரம்பு கோளாறுகள்
இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.
வலி
பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒருசிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.
போதை வஸ்துவின் நச்சுமுறி
பெருங்காயம் மிகச்சிறந்த போதை வஸ்துக்களின் நச்சு முறிவாக செயல்படும்.
புற்று நோய்
பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும். ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.
சரும நோய்கள்
சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின்மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாகதடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்
Saturday, 6 July 2013
இளவரசனுக்கு காதல் தேவையா?
ஆரம்பத்திலிருந்தே திவ்யா-இளவரசன் விவகாரத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது,அவர்களது வயதுதான்.கண்டிப்பாக இந்த வயதில் வருவது வெறும் இனக்கவர்ச்சியேயன்றி காதலில்லை.ஒரு வேலையோ அல்லது சுயதொழிலோ மொத்தத்தில் ஒரு பெண்ணை வைத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு சம்பாதிக்காதவனுக்கு காதல் வருவதும் அதை பேஸ்புக்கிலும்,பத்திரிக்கைகளிலும் ஆதரித்து பொங்குவது கடும்எரிச்சலையே தருகிறது.இங்கு முழக்கமிடும் எத்தனை பேர்உங்களது மகனோ,மகளோ அல்லது உங்களது சகோதர,சகோதரியோ இதே போன்று இருபது வயதுக்குள் காதல் என்று வந்து நின்றால் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைப்பீர்கள் ? செருப்பைக் கழட்டி அடிப்பீர்கள் தானே ?? சாதி,மதம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.ஒரு குடும்பம் நடத்தும் அளவுக்கு,ஒரு பெண்ணை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாதிக்காதவனுக்கு திருமணம் ஒரு கேடா ? எனக்குத் தெரிந்து ஒரே ஜாதியில் அதுவும் சொந்த அத்தை மகளை ஆறுமாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்த ஒருவன் சென்ற வாரம் தூக்கு மாட்டி இறந்துபோனான்.அவனுக்கு 19வயது அந்த பெண்ணிற்கு 17.காரணம் போதுமான வருமானமின்மை & மனப் பக்குவமின்மை.இளவரசன் விவகாரத்தில் அச்சிறுவனை ஹீரோவாக்கி ஜாதிவெறி என்று கூச்சலிடுவதன் மூலம் பதிவர்களுக்கு நிறைய லைக்குகள்,அரசியல்வாதிகளுக்கு நிறைய ஓட்டுகள்,பத்திரிக்கைகளுக்கு அதிக பிரதிகள் விற்பனை,செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் இவையெல்லாம் கிடைக்கிறது,அவ்வளவே.அதை தாண்டி இதில் யாவரும் இம்மாதிரியான காதல் ஜோடிகளுக்கு ஒருக்காலும் அடைக்கலமோ,ஆதரவோகொடுக்கப்போவதில்லை.இவர்களது எண்ணமெல்லாம் இப்படி உசுப்பேத்தி விடுவதன் மூலம் எவன் வீடோ எக்கேடு கெட்டுப்போனால்தான் என்ன ? எவன் வீட்டில் எழவு விழுந்தால்தான் என்ன ? நம்வீட்டில் நடக்காதவரை சரிதான் என்ற எண்ணமும்,தம்சுயலாபங்களும் தவிர வேறொன்றுமில்லை.இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் இவர்கள் வீட்டுக்கு அடைக்கலம் தேடிச் சென்றால் வீட்டைத்தாழிட்டுக்கொண்டு உள்ளே உட்கார்ந்துகொள்ளும் சூரப்புலிகள்தான் இவர்கள்.இங்கு நம்முடைய நிஜமுகம் தெரியவா போகிறதுஎனப் பதிவிடுபவர்களே அதிகம்.ஜாதி என்பது கிட்டத்தட்ட எல்லோருடைய ரத்தத்திலும் ஊறிக்கிடக்கிறது.அதை வெளிப்படுத்தும்விதத்தில்தான் வித்தியாசமிருக்கிறதே தவிர,ஜாதிய கட்டமைப்புகள் மாறியது போல தெரியவில்லை.என்னதான் படித்தவர்கள் அதிகமாகியிருந்தாலும் ஒரு வேலையில்லாத & பக்குவமில்லாத வயதில் காதல் செய்து பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான அச்சிறுவனை எதோ அளப்பரிய சாதனை செய்தவன் போல உருவகப்படுத்தி கூச்சலிடுவதை பார்க்கும்பொழுது இவர்களெல்லாம் மெத்தப் படித்தவர்கள்தானா என்ற ஐயம் எழுகிறது ! இவர்கள் தமிழ் சினிவாவில் 'காதல்' என்ற பெயரில் வரும் குப்பைப்படங்களைபார்த்து மதியிழந்து என்று மட்டும் தெரிகிறது.நிதர்சனத்தில் நடப்பதை பதிவிடுங்கள்,பாழாய்ப்போன உங்களது சுயலாபங்களுக்காக இன்னும் நேரடியாகச் சொல்லப்போனால் லைக்குகளுக்காக இப்படி உசுப்பிவிட்டு இன்னும் பலஇளந்தளிர்களை கருக வைத்துவிடாதீர்கள்,அவ்வளவே.!
(நான் காதலுக்கு எதிரியல்ல.திவ்யா இறந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதுதான்)
(நான் காதலுக்கு எதிரியல்ல.திவ்யா இறந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதுதான்)
Subscribe to:
Posts (Atom)