சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கிற பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மாணவர் விழா நடைபெற்றது. ஏ.டி.ஜி.பி டாக்டர் சைலேந்திர பாபு , சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மாணவர்களோடு கலந்துரையாடிய பின்னர் தலைமையுரையாற்றிய அவர், " Mr.VAIKO is the most dignified politician i ever met" என்றார்.
தகவலுக்கு நன்றி :- வைகோ , மதிமுக இணைய முகநூல்கள்.
.....................................................................................................................................................
திரு.வைகோ அவர்கள் கண்ணியமான அரசியல்வாதி என்று திரு. சைலேந்திரபாபுஅவர்கள் கூறுவதற்கு காரணம் இருக்கிறது.
பொடா சட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அடைபட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டவுடன் எங்கள் திருநெல்வேலி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டார். தினம் தினம் செய்திதாள்களில்மக்கள் தலைவர் வைகோ அவர்கள் பற்றிய செய்திகள் தான். தமிழரிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடைபயணம் அது.
அத்தகைய கீர்த்திமிக்க நடைபயணத்திற்கு சென்னைக்குள் தடை விதித்தார் அன்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. தலைவர் வைகோ உள்ளிட்ட நடைபயண தொண்டர்கள் முன்னிரவே தாம்பரம் அடைந்தனர். தாம்பரத்தை அடுத்து சென்னைக்குள் நடைபயணம் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருந்தார் தலைவர். காவல்துறை அசால்ட்டாக இருந்தது. விடியற்காலை இரண்டு மணியளவில் தாம்பரத்திலிருந்து இரண்டு இரண்டு பேராக நடக்க தொடங்கி விட்டார்கள்.
காவல்துறை விளித்து எழுவதற்குள் இரண்டரை மணி நேரத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அணையா தீபமாகஇருக்கின்ற அறிஞர் அண்ணா சமாதி வந்தடைந்து விட்டனர். அப்போது சென்னையில் இணை கமிஷனராக இருந்த சைலேந்திரபாபு அவர்கள், வைகோ அவர்களை பார்த்து என்ன இப்படி செய்து விட்டீர்கள், தடையுத்தரவை மீறி விட்டீர்களே, உங்கள் தொண்டர்களை கைது செய்கிறோம் என்றார். அதற்கு, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொண்டர்களை யாரையும் கைது செய்யக்கூடாது , வேண்டுமானால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்றார். மேலும், நாங்கள் ரோட்டோரமாக எவருக்கும் தொந்தரவு இல்லாமல் நடந்துதான் இங்கு வந்திருக்கிறோம்என்றார் .தொண்டர்கள் அமைதியாக இருந்தனர்.
திரு.சைலேந்திரபாபு திருப்தி அடைந்து அவ்விடத்தை விட்டு அகன்றார் !! அச்சம்பவம் அந்த அதிகாரியின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளால் மதிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளின் நன்னடத்தையே காரணம். இந்தியாவில் மாபெரும் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழகத்தில் தியாகச்சுடர் காமராசர், அறிவாசான் பெரியார் இவர்களை அடுத்து எஞ்சியிருக்கும்ஒரே அரசியல்வாதி மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே.
ஆகவே தான் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள், வைகோ அவர்கள் கண்ணியத்திற்குரிய அரசியல்வாதி என்று வர்ணித்திருக்கிறார்
No comments:
Post a Comment